Sunday, May 11, 2008

அம்மா ...


விசித்திரமானவள் நீ ...

உன்னை சித்திரமாய் வண்ணம் தீட்ட

வார்த்தைகளால் கோலமிடுகிறேன் ...

அழகாய்

நீ இருக்க ...

அமுதாய்

உன்

பேச்சு இனிக்க...

அன்பான கவனிப்பால்

உன் வசம் தான் ஆயிரம் பேர் ...

தென்றலை விட

மென்மையாய் நீ பேச

சிப்பியும் அறியா முத்தாய்

உனக்குள் என்னை தொலைத்தேன் ...

சுகங்களை நீக்கி

சுமைகளை தாங்கி

துயரங்கள் பல உன்னை வருடினாலும்

புயலுக்கு பின் மலர்ந்த பூப்போல்

புன்னகையுடன்

பூக்கிறாய்

ஒவ்வொரு விடியலிலும் ...

நிழல் என நீ இருக்க

இருள் என நினைத்து நான் விலக

சற்றும் சலிக்காமல்

நிழலாகவே இன்றும் என்னை தொடர்கிறாய் ...

ஆசையாய் அருகில் வந்து

பாசமாய் கட்டித்தழுவி

உன் மேல் முகம் புதைத்து

என் கண்கள் நீர் சிந்தாவிட்டாலும்

எனக்கென நீ கசிந்த துளிகளில்

உன்

பாசத்தின் விலையை

நான் அறிந்தேன் ...

அம்மா

கடல் போல நீ

உன் மேல்

கட்டு மரமாய்

பயமறியாமல்

பயணம் செய்கிறேன் ...

அன்பான தந்தையும்

பாசமான தம்பியும்

என்னைப்போல் உன்னில் இருக்க

சந்தோஷப்பயணம் செய்வாய்

வாழ்க்கை பாதையில் ...

உன் உணர்வுகளுக்கு பின்

என்றும்

நாங்கள் தொடர்வோம் ...

- சிந்து...

No comments: