Wednesday, June 4, 2008

ஊட்டியில் என் விடுமுறை ....


ரம்மியமான இரவு ...

கோடையிலும் பனி சிந்தும் காலைப்பொழுது ...

வென்னிலவா அல்ல வெண்பனியா

தினம் தினம் குழப்பத்தில் இரவு மேகங்கள் ...

விடியலுக்கு கூட முகம் காட்ட தயங்கும் சூரியன் ...

இயற்கையான விஷயங்களை கூட

ரசிக்க வைக்கும் ஒரு சொர்க்கம் அது

ஊட்டி ...


காலைப்பனியில் கால் நடக்க

குழந்தையின் மென்மையை மனம் உணர்ந்தது ...

கம்பளியின் வெப்பத்தில் உடல் புதைந்திட

மனமோ

குளிர்சாரலில் தன்னை தொலைத்தது ...


சிந்தனைகள் ஏதும் இன்றி

பாரமில்லா மனதை சுமந்து

மதியின் கட்டளைக்கு உட்படாமல்

தன் விருப்பத்திற்கு நடந்தன கால்கள் ...


வியக்க வைக்கும் வண்ணங்களில்

எத்தனை எத்தனை பூக்கள் அங்கே ...!

பறிக்க மனம் இன்றி

கொடியிலேயே விட்டு வந்தேன்

ரசனைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ...


மூலிகைகளை மருந்துகளாக உட்கொண்டதுண்டு

ஆனால்

என்றேனும் சுவாசித்ததுண்டா ...?

மாலை காற்றில் மதி மயங்க

மூலிகை வாசத்தில் மனம் மயங்க

செயலற்ற உடலோ

புத்துணர்ச்சியில் மீண்டது ஒவ்வொரு நாளும் ...


தனிமையிலேயே ரசனைக்கு கோடி விருந்து

இதில்

மனம் நெருங்கியவர்கள்

இடமெங்கும் நிறைந்திருந்தாள் ...

பரவசங்கள் ஆயிரம்

மனதிற்குள் அலையடிக்கும் ...

அந்த அலைகளின் தீண்டலில்

லயித்து போயிருந்தேன்

மூன்று நாட்கள் ...


பாசமான சொந்தங்கள் ...

செல்லமான சண்டைகள் ...

சிறுபிள்ளையாய் மாறிய எங்களுக்குள்

சின்னஞ்சிறு போட்டிகள் ...

வலைவுற்ற வீதிகளில்

வலி அறியா சந்தோஷங்கள் ...

இவை அனைத்தும்

இவ்விடுமுறையில்

எனக்கு கிட்டிய இனிய நினைவுகள் ...


- சிந்து







No comments: