
மாலை நேர மழை சாரல்
மயங்க மனம் மறுக்குதடி ...
பெண்ணே ...
சற்று ஒதுங்கி நில் ...
உன் மேல் விழும்
துளிகள் அனைத்தும்
கர்வமாய் சிரிக்குதடி எனை பார்த்து ...
கருங்கூந்தல் மீது
பூச்சூட வேண்டாமடி ...
பெண்ணே ...
கொடி விட்டு உயிர் பிரிந்த
பூக்கள் அனைத்தும்
உன் கூந்தல் ஏறி கேலி செய்யுதடி எனை பார்த்து ...
உன் பாதம் இரண்டிலும்
மணி கொலுசு எதுகடி ...
பெண்ணே ...
உடன் இருக்கும் காரணத்தால்
ஏளனமாய் சினுங்குதடி
பின்தொடரும் எனை பார்த்து ...
என்னுள் நீயாய்
முழுவதுமாய் வந்திடடி ...
பெண்ணே ...
காற்றும் உன்னை தீண்ட
கள்வனாய் மாறுதடி இன்று ...
-சிந்து ...