
கர்வம் கொண்ட காதலுக்கு
சொல்லிவிடாதே ...
நம் சண்டைகள் எல்லாம்
செல்லமாகத்தான் என்று ...
தெரிந்துவிட்டால்
கொன்றுவிடும்
நம்
காதலை ...
- சிந்து ...
"random thoughts to which i broke-into in that still moment.."
பஞ்சு மெத்தை மீதினிலே பம்பரமாய் இருப்பவனே ... துள்ளி விளையாடும் நேரத்திலே தொட்டில் தேடும் மன்னவனே ... கண்கள் இரண்டும் அழகாக கர்வம் தீர்க்கும் விருந்தாக ... உற்று பார்க்கும் பார்வையிலே கவர்ந்து இழுத்து கொள்பவனே ... ஓய்யாரமாய் தூளியிலே அசைந்து கொண்டு நீ சிரிக்க ... சலங்கை ஒலியும் சங்கீதமாய் இசைக்க வைக்கும் மாயவனே ... இறுக பிடிக்கும் உன் பிடியில் உன் மெல்லிய மனம் புரிந்துவிடும் ... விலகும் விருப்பம் என்றும் இல்லை என் மனதையும் தந்தேன் சின்னவனே ... சிந்து ... |
ரோஜா பூ இதழ்கலடி ... பௌர்ணமியாய் கண்களடி ... பிஞ்சு விரலால் நீ பிடிக்க மனம் மெல்லிசையாய் இசைக்குதடி ... முட்டி போட பழகவில்லை ... தத்தி தத்தி பேசவில்லை ... தவழ நீயும் வேண்டாமடி உன் பவழ பாதம் நோகுமடி ... பிஞ்சு பாதத்தில் நீ மிதிப்பாய் ... பிரியமுடன் நீ சிரிப்பாய் ... கோடி கண்கள் வேண்டுமடி உன் சிரிப்பும் எனக்கு சிறைதானடி ... உற்சவத்தில் நீ இருக்க ... உற்சாகத்தில் உன் மனம் சிரிக்க ... தூக்கி வைத்து இருப்பேனடி உனக்கு தூளியாய் கைகள் மாறுமடி ... பிஞ்சு குழந்தை சிணுங்கலெல்லாம் ... பிணைந்து கிடக்கும் உறவிற்காக ... யாருக்கு இங்கே தெரியுமடி உன் அழுகையில் அன்பு கூடுமடி ... அழுகாமல் நீ இருந்தால் ... அமைதியாக வீடிருந்தால் ... தேவதை வீட்டினுள் இருக்குதென்று அட தெய்வத்திற்கு எப்படி தெரியுமடி ...?! |
- சிந்து ...
*** சண்டைகள் வேண்டுமடா நமக்குள் ... ஒரு சின்ன சிணுங்களில் நீ சமாதானம் அடைவதை ரசிக்க ... *** கவிதையாக காதல் செய்ய கவிஞன் ஆக வேண்டாம் காதலனாகி பார் ... உன்னவளின் கண்ப்பார்வை உன்னை கவிஞனாக்கி விடும் ... *** உன்னை பற்றி கவிதை எழுத யோசிக்கிறேன் ... உன் பெயரை தவிர வேறொன்றும் தோன்றவில்லை ... |
*** கண் இரண்டில்
இமைகள் வேண்டாம்
கள்வனே ...
உன்னை
கண் சிமிட்டும் நொடியில் கூட
மறைக்க மறுக்கிறேன் ...
*** கவிதைகளில்
வாழ்க்கையை உணர்த்தலாம் ...
ஆனால்
என் வாழ்க்கையை கவிதையாக மாற்ற
உன்னால் மட்டுமே முடியும் ...
*** உன்னை பற்றி தெரிந்த எனக்கு
என்னை பற்றி தெரியவில்லையடா ...
உன் அளவிற்கு ...
*** நிலவாக நீ இருந்தால்
ஒரு நாளில் தேய்ந்திடுவாய் ...
கனவாக நீ இருந்தால்
காலை பொழுதில் கலைந்திடுவாய் ...
மறையாமல் பார்த்து கொள்கிறேன்
என் மனமாக நீ இருந்தால் ...
*** உதிரமாக உன்னை கொண்டு
உன் ஓட்டத்தினால் உயிர் கொள்வதை விட
இறந்து விடுவேனடா
ஓடி கலைத்த உதிரமெல்லாம்
உறைந்து போய் என்னுடன் சேர ...
- சிந்து ...
*** கண்கள் முழுதும் காதல் கொண்டு கண் இமை மூடி மறைத்து வந்தேன் ... கண்கள் திறந்து நானும் பார்த்தால் கலங்கி நீயும் போவாயடா ... காதல் என்னும் வார்த்தை கொண்டு நீ காயப்படுத்திய தழும்புகள் கண்டு ... *** உன் நினைவுகளால் கண்ணீர் சிந்தும் என் கண்களுக்கு மருந்தாக சில முத்தங்களை தா ... கண்ணீரெல்லாம் உறைந்து போகட்டும் காதலாக ... - சிந்து ... |
*** நினைப்பதற்குள் நெஞ்சம் பூக்கிறது ... ரசிப்பதற்குள் புன்னகை பூக்கிறது ... கண்கள் நிறைந்து வழிந்து ஓட கண்ணே அறிந்தேன் இதுதான் காதல் பெருக்கெடுப்பா ... ! *** அழகாய் சிந்தும் மழை சாரலில் விளையாட துடிக்கும் மனம் அடைமழை வந்தால் ஒதுங்கி நிற்கவே சொல்கிறது ... அதுபோலத்தான் அன்பும் அளவாக இருக்கும் வரை அழகாக இருக்கும் ...! *** கண் கொண்ட கருவறையில் காதல் உன்னை சுமந்திருந்தேன் ... நீ கண்ணீராய் வெளியேற இமை கொண்டு மறுத்திருந்தேன் ... தடுத்த இமைகள் ... துடித்து விலக ... களைந்து போனாயோ , கருவிலே ...! - சிந்து ... |
வானவில்லாய் தோன்றுகிறது என் சந்தோஷங்கள் ... நிறமுற்றது என்று நினைத்தீர்களா இல்லை தோன்றிய சில வினாடிகளில் நிறத்தின் சுவடுகள் கூட இல்லாமல் மறைக்கிறது ... திகட்டும் அளவிற்கு பாசம் ... திணறும் அளவிற்கு சந்தோஷம் ... திரும்பும் இடமெல்லாம் இறைந்து கிடக்கும் இன்பம் ... அள்ளிக்கொள்ள கைகள் நீட்டினாள் அனைத்தும் காணாமல் போகிறது கானல் நீராய் ... கேட்காமல் வாங்கி கொடுத்த பொம்மைகள் விளையாடுவதர்க்குள் திரும்ப பறித்து கொண்ட போது ஏமாந்து நிற்கும் குழந்தைகளின் கண்ணீர் ஏக்கங்கள் நிறைந்திருக்கும் ... என் கண்ணீர் கூட அப்படித்தான் பொம்மையை இருக்கிறது பாசம் ... சிறுபிள்ளையாய் இருந்தது முதல் இன்றுவரை பல முறை ஏமாந்து கொண்டிருக்கிறேன் நொடியில் காணமல் போகும் இந்த பாசத்தினால் .... -சிந்து ... |
விசித்திரமானவள் நீ ...
உன்னை சித்திரமாய் வண்ணம் தீட்ட
வார்த்தைகளால் கோலமிடுகிறேன் ...
அழகாய்
நீ இருக்க ...
அமுதாய்
உன்
பேச்சு இனிக்க...
அன்பான கவனிப்பால்
உன் வசம் தான் ஆயிரம் பேர் ...
தென்றலை விட
மென்மையாய் நீ பேச
சிப்பியும் அறியா முத்தாய்
உனக்குள் என்னை தொலைத்தேன் ...
சுகங்களை நீக்கி
சுமைகளை தாங்கி
துயரங்கள் பல உன்னை வருடினாலும்
புயலுக்கு பின் மலர்ந்த பூப்போல்
புன்னகையுடன்
பூக்கிறாய்
ஒவ்வொரு விடியலிலும் ...
நிழல் என நீ இருக்க
இருள் என நினைத்து நான் விலக
சற்றும் சலிக்காமல்
நிழலாகவே இன்றும் என்னை தொடர்கிறாய் ...
ஆசையாய் அருகில் வந்து
பாசமாய் கட்டித்தழுவி
உன் மேல் முகம் புதைத்து
என் கண்கள் நீர் சிந்தாவிட்டாலும்
எனக்கென நீ கசிந்த துளிகளில்
உன்
பாசத்தின் விலையை
நான் அறிந்தேன் ...
அம்மா
கடல் போல நீ
உன் மேல்
கட்டு மரமாய்
பயமறியாமல்
பயணம் செய்கிறேன் ...
அன்பான தந்தையும்
பாசமான தம்பியும்
என்னைப்போல் உன்னில் இருக்க
சந்தோஷப்பயணம் செய்வாய்
வாழ்க்கை பாதையில் ...
உன் உணர்வுகளுக்கு பின்
என்றும்
நாங்கள் தொடர்வோம் ...
- சிந்து...
அப்பா...
உன்னை நான் எதனுடன் ஒப்பிடுவது....
ஆயிரம் மலர்களுடனா...?
இல்லை
அழகான வானவில்லுடானா...?
மலர்களின் வாசத்தை விட
உன் பாசம் மனம் வீச...
வானவில்லின் வண்ணங்களை விட
உன் எண்ணம் நிறம் சூட்ட
அன்பான அப்பா என்று உன்னை சொல்ல
வார்த்தைகளை தேடி
இன்னும் அலைகிறேன்...
தோல் குடுக்கும் தோழனாய்
நீ இருக்க ,
உன் மேல் தலை சாயும் , ஒரு நொடியில்
நீ பாசத்துடன் தலை வருடும் சிறுபொழுதில்
என் மனம் சுமந்த குழபங்களை
உன்னிடம் நீ எடுத்துக்கொள்ள
நிம்மதியாய் உறங்கி போகிறேன்...
உன் பேச்சால்
பலரை
உன் வசம் நீ கொண்டிருந்தாலும்,
ஒரு பார்வையில்
என்னையும் அறியாமல்
உன்னிடம் தோர்ப்பவல்
நான் மட்டுமே....
அப்பா
ஆயிரம் சந்தோஷங்களை
பரிசாக தரும் உன்னை
கண்ணீர் சிந்தவைத்த சில பொழுதுகளுக்காக
இன்றும் வருந்துகிறேன்....
ஆசை மகளாய் எனை வளர்த்த நீ
ஆயிரம் இன்னல்கள் என்னால் அடைந்தாலும்
பாசத்துடன் இன்னும் எனை அணைக்கிறாய்...
உன்னை ஒவ்வொரு நொடியும் ரசித்து
உன்னால் என்றும் பெருமைப்படும்
உன் அன்பு மகளாய்
பல வருடங்கள் நான் இருக்க
கடவுளை வேண்டுகிறேன்....
- சிந்து...
இல்லை என்று நினைத்த
உறவின் உருவமாய் ...
சுகத்திலும் சோகத்திலும்
மறுக்க முடியா தோழனாய்....
கண்கள் குளமாக
சந்தோஷத்தில் மனம் நிறைய...
உறவின் உரிமையை உணரும் முன்னே
காரணமின்றி விட்டு சென்றான்...
கண்கள் மீண்டும் குளமாக
மனமோ உறவின் உணர்வை ஏங்க....
சிந்து...