Saturday, October 18, 2008

கர்வம் ...


கர்வம் கொண்ட காதலுக்கு

சொல்லிவிடாதே ...

நம் சண்டைகள் எல்லாம்

செல்லமாகத்தான் என்று ...

தெரிந்துவிட்டால்

கொன்றுவிடும்

நம்
காதலை ...

- சிந்து ...

Friday, October 10, 2008

இசை ...


மௌனத்தின் ஓசை கூட


ராகம் பாடி இசைக்கிறது


தாளம் போடும்


உன் விழியுடன் சேர்ந்து ...


-சிந்து...

என்ன செய்வேன் ..?


என்


கண்ணாக நீ இருந்தால்


கண்ணீர் விட்டு கரைந்திருப்பேன் ...


இமையாக


நீ இருந்தால்


துடித்துக்கொண்டே இறந்திருப்பேன் ...


மனமாக இருக்காயடா


மௌனம் தவிர வேறென்ன செய்வேன் ...?!


- சிந்து...


காத்திருக்கிறேன் ...


நாணி தலை குனிந்து


நிலவொளியில் தன்னை மறந்து


கோலம் விரல் போட


தனிமையிலே நடந்து வந்தேன் ...


மனமோ


மல்லிகையாய்


மாலையிட காத்திருக்க ...


வரும் என் மன்னவனை


நித்திரையும் தேடுதடி ...


- சிந்து ...

Sunday, October 5, 2008








நட்பு என்னும் உறவில் கூட


காயங்கள் மாறி


தழும்புகள் மிஞ்சும் ...


ஆனால்


காதல் என்னும் உணர்வில்


தழும்புகள் ஏதடி


காயங்கள் ஆறாமல் ...?!
-சிந்து ...